' தன்லை மற்ற, அசாதாரண ஆதரவு, அன்பு, அர்ப்பணிப்பு," />
இன்று சூன் 1ந் தேதி உலகெங்கும் "பெற்றோர் தினம்" கொண்டாடப்பட்டு வருகிறது. ' தன்லை மற்ற, அசாதாரண ஆதரவு, அன்பு, அர்ப்பணிப்பு, பாசம், கவனிப்பு வைத்து தம் குழந்தைகளைக் காத்துவரும் பெற்றோருக்கு அவர்களைப் பாராட்டி, அவர்களின் தியாகத்தை மனதில் வைத்து, வளர்ச்சிக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக, "உலக பெற்றோர் தினம்" கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஐ.நா.சபையே அறிவித்து இருக்கிறது. "தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை........ அன்பின் எல்லை. அன்பு என்ற சொல் எத்துணை பெரியது? அதன் அளவு எது?எல்லை எது? எனப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் செய்த செயல்களே அவற்றின் அளவீடாக அமையும். "அன்னை தந்தையே அன்பின் எல்லை. அதுதான் எல்லை. ஈன்று புறந்தருதல் தாயின் கடன், சான்றோனாக்குதல் தந்தையின் கடன். - புறநானூறு. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்" (குறள்) இவையெல்லாம் இலக்கியம் காட்டும் சான்றுகள் இயல்பான வாழ்விலே, " நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக் கூடாது "என்று சொல்லாத பெற்றவர்கள் உண்டா? உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்தியவள் தாய் என்றால் உலகை நமக்கு அறிமுகப்படுத்தியவர் தந்தை. தாயின் கருவறை சுமந்த பாரத்தைக் காட்டிலும் தந்தையின் தோள்கள் சுமந்த பாரம் அதிகம். பெண்ணாக இருந்தால், பணம் சம்பாதித்து ஒரு நல்லவன் கையில் பிடித்துக் கொடுக்கும்வரை போராடுவார் அப்பா. மகனுக்கு எனில், அவன் வாழ்க்கையிலே நிலைத்து நிற்க இறுதிவரைத் தூணாகத் தாங்கி நிற்பார் அப்பா. அம்மாபட்ட வேதனை "கண்ணீர் காட்டிவிடும்" அப்பாவிற்கு அழத் தெரியாது. அழுதால் தன் பிம்பம் உடைந்துவிடும் என்று மனச் சிறையில் அழுத்தி அழுத்தி புதைத்து வைக்கும் வேதனைகள், அவமானங்கள். தன் மகன் நல்ல நிலைக்கு வந்த பின் சொல்வார் தான்பட்ட கஷ்டங்களை, சிலர், சொல்லாமலே எரிந்தும் போய் விடுவார்கள். பக்கத்து வீட்டுப் பையன் வைத்து ஒட்டும் மிதிவண்டியைப் பார்த்து விட்டு/அது வேண்டும் எனக் கேட்பான் மகன், அதற்கு முன்னரே அவர் மனதில் அது போல தன் மகனுக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி வர வேண்டும் என்ற ஆசை, எண்ணம், வாங்க முடியாமல் போகிறதே என்ற ஏக்கம், எப்படியாவது தன் மகனுக்கு வாங்கித்தரவேண்டி அவர் படும் வேதனை ,யாருக்கும் வெளியில் தெரியாது. அவருக்கு வெளிக்காட்டத் தெரியாது. இது தான் அப்பா. இப்படி அன்பால், இரத்தத்தால் உடல் வளர்த்த தாயும் வாழ்க்கையை வளர்த்துவிட்ட தந்தையும் கண்முன் காணும் தெய்வங்கள் . "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்" அப்படி போட்டி போட்டுக்கொண்டு பொத்திப் பொத்தி பாதுகாப்பவர்கள் பெற்றோர். மனித இனம் கைக்கொண்ட ஒரு சீரிய நெறிதான் குடும்பம் என்ற அமைப்பு. குடும்பங்கள்தான் இவ்வினத்தின் பாதுகாப்பு வேலி. குடும்பங்கள் சிதைந்தால், சமூகம் சீரழியும். சமூகக் கட்டமைப்பு மாறினால்... மனிதன்" என்பவன், காட்டு விலங்குகளின்றும் கீழான உயிரினமாகவே மாறும் நிலைதான்ஏற்படும். பிள்ளைகள் இல்லாத மனிதன் உண்டு. பெற்றோர் இல்லாத மனிதன் கிடையாது. பெறுதல் என்பதிலிருந்தே பெற்றோர், பேறு என்ற சொற்கள் அமைகின்றன. "தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது. " (குறள்) இதுவே பெற்றோரின் நினைப்பு. பண்பாட்டுக் கடத்திகள் பெற்றோர்கள் ஒரு குடும்பத்தின் பாரம்பரியம்; பண்பாடு; கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்குக் கடத்துபவர்கள் பிள்ளைகள். இன்றைய சமுதாய அமைப்பிலே "முதியோர் இல்லங்கள்" பெருகிவருதல் சிறப்பன்று. "வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்" என்கிறது புதுக்கவிதை. எவ்வளவோ வேலைகளுக்கு இடையிலும் 2 நிமிடம் பெற்றோர்க்கு ஒதுக்குங்கள், பேசுங்கள், பேணுங்கள். அதுவே, பெற்றோர்க்கு நாம் செய்யும் கைமாறு. முதியோர் இல்லம் காணாத முதுமை பேறுகளில் பெரும் பேறு. உலகில் சிறந்த பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அனைவருக்கும் "பெற்றோர் தின வாழ்த்துகள் " மகிழ்வுடன், -திருமதி. இரா. இராஜாமணி ஈரோடு. Breaking News:
உலக பெற்றோர் தினம்