செம்மூதாய் சதாசிவத்தின் பதினோரு நூல்கள் வெளியீட்டு விழா தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவர் பாவலர் கோ. மலர்வண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கூத்தப்பாடி மா.பழனி வரவேற்புரை ஆற்றினார். தகடூர் தமிழ்ப் பேரவைத் தலைவர் திரு.இரா.சிசுபாலன், தமிழ்க் கவிஞர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் ப.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியை முனைவர் சா. பூங்கொடி அறிமுகவுரை ஆற்றினார். அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் முதன்மையுரை செய்தார். அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. சங்கர், வேலூர் மாவட்ட தமிழியக்கச் செயலாளர் முனைவர் பா. சம்பத்குமார், பிரான்சு நாட்டை சார்ந்த வள்ளலார் சன்மார்க்கச் சங்கத் தலைவர் பாரீஸ் ஜெய பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தகடூர் புத்தகப் பேரவைச் செயலாளருமான மருத்துவர் இரா. செந்தில் புதினங்கள் ஐந்து, கவிதை நூல்கள் மூன்று, ஆய்வு நூல்கள் மூன்று என மொத்தம் பதினோரு நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.