திருப்பம் " - என்ற இந்த புதினமானது கிராமத்து வாழ்வையும் நகரத்து வாழ்வையும்" />
நூலாசிரியர் :
செம்மூதாய் சதாசிவம்
வெளியீடு :
செம்மூதாய் பப்ளிக்கேஷன்ஸ்
விலை: ரூ.160/-
பக்கங்கள்: 144
நூல் விமர்சனம்
கூத்தப்பாடி மா. பழனி, 9626587770
"திருப்பம் " - என்ற இந்த புதினமானது கிராமத்து வாழ்வையும் நகரத்து வாழ்வையும் மையப்படுத்தி பேசுகின்ற ஒரு புதினமாகும். கிராமத்து மக்களுக்கு நகரத்தின் மீது இருக்கும் ஈர்ப்பு ஒரு வித மயக்கத்தையும், நகரத்து மக்களுக்கு கிராமத்தின் மீதான பார்வையும் வேறுபட்டதாக இருப்பது இயல்பு.
நகரத்து மக்களின் வாழ்வியல் முறை கல்வி, தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்ததாகவும் கிராமத்து மக்களின் வாழ்வியல் முறை விவசாயம் கால்நடை வளர்ப்பு சார்ந்ததாகவும் இருக்கும்.
கிராமத்து இளைஞனான வேலாயுதம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு சென்னையில் உயர் கல்வி பயில்வதற்காக தங்களின் குடும்ப வறுமை சூழலையும் மீறி படிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் நகரத்திற்கு சென்று உயர்கல்வி - எஃபில் படிப்பில் சேர்கிறார்.
சாதாரண விவசாய ஏழை குடும்பத்தைச் சார்ந்த இவரது பெற்றோர்கள் இவரின் படிப்புக்காக படுகின்ற பாடானது புதினத்தை படிக்கும் நம்மை கண்ணீர் சிந்த வைப்பதாக உள்ளது.
தான் வாழும் கிராமத்தில் மட்டுமல்ல சுற்றி இருக்கும் பல கிராமங்களிலும் உயர்கல்வி படிப்பதற்காக சென்னை சென்றிருக்கும்
ஒரே நபர் வேலாயுதம் என்ற பெருமையோடு உயர்கல்வியை படித்து வருகிறார்.
நகரத்தில் இவருக்கு கிடைத்த நண்பர்கள் இவர் படிக்கும் கல்லூரியில் இவரது வழிகாட்டியாக உள்ள பேராசிரியர்
உள்ளிட்டவர்களோடு வேலாயுதத்தின் நட்பு எப்படி இருந்தது.
குடும்ப வறுமை சூழல் ஒரு பக்கம் விரட்டினாலும் படிப்பை கைவிடுவதாக இல்லை என்ற வெறித்தனத்தோடும் லட்சியத்தோடும் எஃபில்.. பிஎச்டி போன்ற ஆய்வுப் படிப்புகளை படித்து முடித்து அதன் பிறகு வேலாயுதம் தனியார் பள்ளி, கல்லூரிகளில்
பணியாற்றிய அனுபவம் உள்ளிட்டவைகளை பற்றி புதினம் அற்புதமாக விளக்கிச் செல்கிறது.
முனைவர் பட்ட ஆய்வு வரை முடித்திருக்கும் வேலாயுதம் முடிவில் நகரத்திலேயே வேலையைத் தேடிக் கொண்டாரா?
இவருக்கு திருமணம் நடைபெற்றதா?
இவருடைய வாழ்க்கையில் எடுத்த அடுத்தடுத்த முடிவுகள்
என்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்த புதினத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தப் புதினத்தை வாசிப்பதன் மூலமாக பயனுள்ள ஒரு நூலை வாசித்த அனுபவம் ஏற்படும்.
தொடர்புக்கு: 9444200369