Breaking News:
tamilnadu epaper

தேடாத வந்த செல்வம்

தேடாத வந்த செல்வம்


நானே எத்தனை முறை முயன்றாலும் அந்தச் செல்வம் மட்டும் மனதிற்கு வரவே மாட்டேங்குது... யார் அந்த செல்வம்..


திருவிளையாடல் தருமி மாதிரி என்னைக் கோவிலில் வைத்து கலங்க வைத்து விட்டாயே...


திடீரென்று என் பின்னாடி இருந்து “என்னைப் பற்றி எழுதேன் நட்பே!”என்று


“அதாரு... திரும்பினால் நமது நட்பு பட்டீஸ்வரர்!”


“எதற்கு உன்னைப் பற்றி எழுத வேண்டும் நான்?”


“நீ தேடாத வந்த செல்வம் நான் தானே!” என்றார்.


“ஆமாம்! ஆனால் அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது!” என்றேன்.


“ஏன்?... அப்படித்தான்!”


“நட்பே! என்னிடம் எவ்வளவு வாதாடி உள்ளாய்? திட்டியுள்ளாய்! உன்னிடம் நான் எப்பொழுதாவது கோபப்பட்டுள்ளேன்னா?”


“இல்லை!”


“பிறகென்ன உனக்குச் சந்தேகம்!”...


“இருக்கே!” என்றேன்.


“ என்னது?” என்றான்.


“அந்தத் தருமிக்குப் பொற்கிழி வாங்கிக் கொடுக்க ஒரு பாட்டு எழுதி கொடுத்தாய் அல்லவா!”


“ஆமாம்! ஆமாம்! நன்றாக நினைவிருக்கிறது! 


“அப்போது என்ன நடந்தது?”


“நக்கீரன் என் பாட்டில் பிழை இருப்பதாகச் சொன்னான். நானும் கோபம் கொண்டேன்!’


“கடைசியில் தருமிக்குப் பொற்கிழி வாங்கிக் கொடுத்து விட்டேனே!”


“இப்போதும் உனக்கு என்னைப் பற்றி எழுதினால் ரெட் கார்பெட் கிடைக்கச் செய்வேன்!”


"இல்லை! இல்லை! நீ நினைக்கிற மாதிரி தர்பார் இது இல்லை, அங்காவது உன் பாட்டு பாட அனுமதித்தான் மன்னன்!"


இங்கோ,


"என்ன சொல்கிறாய்?"


"பிரசுரமே பண்ண மாட்டாங்க. எப்படி கோபப்படுவாய்? யார்மீது? எப்படி எனக்கு வாங்கி கொடுப்பாய்? இதெல்லாம் சரிப்பட்டு வராது!"


"இது என்ன புது மாதிரி இருக்கு?


இது இப்படித் தான்"


 "சரி! இருந்தாலும், நம் நட்பைப் பற்றி எழுதேன்".


"எழுதுகிறேன்! ஆனால், பிரசுரமாகவில்லை எனில், இங்கு யாருடனும் சண்டை போடக்கூடாது, கோவ படக்கூடாது! சரிதானே!"


"உனக்காக விட்டுவிடுகிறேன். எழுது, எழுது,!" என்றான் என்னைப் பற்றி நன்றாக எழுது! அப்படியே, என் கோவில் பற்றியும் எழுது! ஊர் பற்றியும் எழுது!"


"அதற்கு வேறு ஒரு தலைப்பு!' 


"அதென்ன?"


"நான் பார்த்த ஆன்மிகத் தலங்கள்!"


"ஆஹா! அருமையாக உள்ளது தலைப்பு!"


"அதனால் நிறைய என்னைப் பற்றி எழுது!" 


"ரொம்பத்தான் ஆசை!"


"ஏன் அப்படி சொல்கிறாய்?"


"நான் என் பெயருக்குத் தகுந்த மாதிரி என் நாராயணன் பற்றியும் எழுத வேண்டாமா?"


"ஆமாம்! ஆமாம், அர்ச்சனை எல்லாம் எனக்கு, அமுது மட்டும் அவனுக்கு, இதுதானே உன்னுடைய தனிச் செயல் அப்படித்தானே!"


"இல்லை இல்லை இருந்தாலும், பட்டீஸ்வரா! சிவகிரியில் பிறந்தேன். நாராயணனை வழிபடும் அகத்தில் வந்தேன் அல்லவா?"


"உனக்கு அவனைக் கண்டால் மரியாதை ஜாஸ்தி தான்!"


"இருந்தாலும், உனக்கும் எனக்கும் இருக்கும் நட்பு அவனிடத்தில் இல்லைதானே!"


"நட்பு பெரிதா மரியாதை பெரிதா?"


"என்ன சொல்லப் போகிறாய்?"


"சரி! சரி! இன்று, உன்னைத் தேடி மூவர் வருகிறார்கள் போ...போ... அவர்களைக் கவனி நான் உன்னைப் பற்றி 

எழுதுகிறேன்".



-K. BANUMATHI NACHIAR

SIVAGIRI