tamilnadu epaper

நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

நூலின் பெயர் : அஞர்

 ஆசிரியர்: ரவி நவீனன் 

விலை : ₹120/-.

வெளியீடு: புஸ்தகா

தொடர்புக்கு : 9980387852


அஞர் என்றால் சோம்புதல், ...மன உளைச்சல், மன வருத்தம், நோய் ,அச்சம் இவை தவிர துயரம் என்ற பொருளாம்.


   அன்றாட வாழ்வில் எழும் பிரச்சினைகளை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பு இது.


இதில் ஒரு சில இங்கே :


1. கூத்தாடி:


        வயிற்றுப் பிழைப்புக்காக கயிற்றில் ஏறி காசு கேட்கும் கூத்தாடியை விரட்டிய அதே போலீஸ்காரர் கழைக்கூத்தாடி பட ஷூட்டிங் நடக்கும் இடத்தில் யாரோடு போனில் சிரித்துப் பேசுவதாக முடிகிறது.


9. அழகிய நர்ஸ் வேணும்:


     மார் வலியால் துடித்த தேவராஜன் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து மருத்துவமனையில் சேர , பரிசோதித்த மருத்துவர் ஆபரேஷனுக்கு பிறகு 1 மாத கவனமாக இருக்க வேண்டும் என்றும், தனிமையில் இருப்பதால் ஸ்டாப் நர்ஸ் ஏற்பாடு செய்வதாகவும் கூற, அவர் அழகான 2 நர்ஸ்களை ஏற்பாடு செய்யுங்கள் அதற்கான பணம் தருகிறேன் என்கிறார்.


   வெளியில் வந்த மருத்துவர், 70 வயதில் அவருக்கு வந்த ஆசையைப் பாருங்கள் என சக மருத்துவரிடம் கண்களைக் கொட்டி சிரித்தார்.  


   அதற்கு பணியாள் ஒருவர் அவர் தப்பானவர் அல்ல, தனிமையில் இருக்கும் அவரோடு, இதைச் சாக்காக வைத்தேனும் , அவரின் 2 மகன்களும் ஒரு மாத காலம் தன்னோடு இருப்பார்களே என நினைத்து அவ்வாறு கேட்டதாகக் கூறுகிறார்.


   15. இ.எம்.ஐ கட்டணும் :


பள்ளித் தாளாளர் மனைவியின் தம்பியால் யு.கே.ஜி படிக்கும் பிள்ளைகள் மிரண்டதாக நெறய புகார்கள் வர, பள்ளி முதல்வரிடம் மனநல ஆலோசனைக்கான ஆசிரியை , நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறுகிறார்.


    புகாரில் ஒன்று சிறு பிள்ளைகளின் பெற்றோர் வீட்டில் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்து அந்த தாளாளர் மனைவியின் தம்பியிடம் சொல்ல வேண்டுமாம். சொல்லாவிட்டால் கண்ணை நோண்டுவானாம். இதை தாளாளரிடம் சொன்னால், அவன் அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டான் என்கிறார். தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டு இ.எம்.ஐ கட்ட வேண்டிய தையும் நினைத்து முதல்வர் பதிலேதும் பேசாது திரும்புகிறார்.



   பட்டிமன்ற பேச்சாளர் " முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா" பாடலில் வரும் முஸ்தபா கடைசி வரை படத்தில் வரவில்லை என்றது போல "அஞர்" என்பதன் விளக்கம் மற்றும் ஒரு குறள் துவக்கத்தில் இடம் பெற்றுள்ளதே தவிர, அந்த தலைப்பில் ஒரு சிறுகதையும் இதில் இடம்பெறவில்லை.


-ஸ்ரீகாந்த்

திருச்சி