நூல் ஆசிரியர்- அனுராதா ஜெய்ஷங்கர்
பேக்கிடெர்ம் டேல்ஸ் மற்றும் புஸ்தகா உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
எழுத்தாளர் அனுராதா ஜெய்ஷங்கர் அவர்களின் முதல் புத்தகம்.
13 சிறுகதைகளும், 1. குறுநாவலும் அடங்கிய தொகுப்பு. ஒரு கதையின் பெயரே புத்தகத்தின் தலைப்பு. அட்டைப் படமும் அழகு.
1.புதுப்புனல்- கணவனை இழந்து, ஒரு ஆண் குழந்தையுடன் தனித்துவிடப்பட்ட பெண். ஓர் உள்நோக்கத்தோடு அவளுக்கு உதவி செய்யும் பில்டிங் காண்ட்ராக்டர். அந்தக் கயவனிடமிருந்து அவளுக்கும், அவள் குழந்தைக்கும் அடைக்கலம் அளிக்கும் பள்ளி வாட்ச்மேனும், அவர் மனைவியும்.
2.கடல்கன்னி- கடல் என்றாலே எல்லோருக்கும் பரவசம், காதல் உண்டு. ஆனால் கடல் போல் பரந்து விரிந்த இந்த எழுத்தாளரின் கற்பனை வளம் வியப்பில் ஆழ்த்துகிறது. அவசியம் படிக்க வேண்டிய கதை.
3.மூச்சு விடும் நேரம்- இந்தக் காலத்தில், பருவ வயதில் குழந்தைகளை வளர்க்கும் டென்ஷனில், பெற்றவளுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்படுகிறது என்பதை அழகாகச் சொல்லும் கதை.
4.பருப்பு அளவு பொறுப்பு-பருப்பு அளவாவது பொறுப்பு இருக்கா என்று அடிக்கடி கணவனைக் கேட்கும் மனைவி, நகைச்சுவை இழையோடும் கதை. படித்து தெரிந்து கொள்ளவும்.
5.இனியொரு விதி செய்வோம்- பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கயவனை, அவன் அறியாமலேயே அவனைப் பழிவாங்கியது.
6.நானும் ஸ்ருதியும் என் கேர்ள் ஃப்ரண்ட்ஸும்- பசங்க ஸ்மார்ட்டா இருந்தா பார்க்கணும், பேசணும்னு தோணறது ஒரு பொதுவான ஈர்ப்பு தான். ஆனா பசங்களோட பழகும்போது ஒரு லிமிட் இருக்கணும். பிடிச்சிருந்தா தைரியமாய் வெளியில சொல்லணும்.
7.பனிக்கதவு- கணவன் இறந்தவுடன், முன்னால் காதலன் வந்து நல்லவன் மாதிரி நடிச்சாலும் நம்பிவிடாமல், குறிக்கோளில் கண்ணும், கருத்துமாய் இருக்கணும்.
8.லவ் யூ ஹரிணி- இரு பெண் குழந்தைகள். அதில் சிறியவள் ஸ்பெஷல் சைல்ட். தங்கையை வெறுக்கின்ற அக்காவுக்கு, அந்த தங்கையை அழகாகப் புரிய வைக்கும் அப்பா.
9.லவ் ஆல்- மணம் ஆனவுடன் கணவன் வழக்கம் போல எல்லாம் செய்வது போல மனைவியும் பாட்டு, டான்ஸ், கேம்ஸ் என்று பயிற்சி எடுத்துக் கொள்வதில் தடை இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் கதை.
10.ரயில் பயணங்களில்- ரயில் பயணம் எல்லோருக்குமே சுவாரஸ்யமானது தான். ஆனால் இந்தக் கதையின் சுவாரஸ்யத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
11. அரும்பு மலரும் தருணம்- இது ஒரு அழகிய காதல் கதை.
12. உறவுச் சக்கரம்- பெற்றோர்கள் அவர்களுக்கு வயதாகி உடல் நலமில்லாத பொழுது, நமக்கு குழந்தையாகி விடுகிறார்கள்.
13. ஜனனி 2.0- பெற்றோர்கள் நம்மை வளர்த்து ஆளாக்குகிறார்கள், மணமுடித்து வைக்கிறார்கள். பின்னர் பேரக் குழந்தைகளையும் வளர்த்தெடுக்கிறார்கள். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும், அவர்களுக்கும் ஓய்வு வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
14. உயிரில் மலர்ந்த சுடர்கள்- குறுநாவல்
தம்பதிகள் தங்களுக்குக் குழந்தை வரம் இல்லையென்று வருத்தப்படுவதைவிட, மாற்றி யோசித்தால் நலமே என்பதை உணர்வு பூர்வமாய்ச் சித்தரிக்கும் கதை.
அனைத்துமே பல்வேறு போட்டிகளில் வென்ற கதைகள். படித்து அனுபவியுங்கள். Mail id [email protected] பார்வதி நாகமணி சென்னை-59.
-பார்வதி நாகமணி
சென்னை-59