அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்; ஆனால் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம்”

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்; ஆனால் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம்”



ஹவானா,பிப்.

- கியூபா அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த எப்போதும் தயாரா கவே உள்ளது. ஆனால் அவர்கள் அச்சுறுத்தல்களை முன்னெடுத்தால் அதற்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடக்காது என அந்நாட்டு ஜனாதிபதி மிக்வெல் டயஸ்-கானெல் பெரு மிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கியூபா தோல்வியடைந்த நாடு அல்ல. உலகின் மிகப்பெரிய நாட்டின் உச்சகட்ட அழுத்தத்தை மிகுந்த உறுதியுடன் எதிர்கொள்ளும் நாடு என்று பெரு மிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கியூப தலைமுறை யினர் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலேயே வளர்ந்தவர்கள், தற்போ தைய கடினமான மோசமான சூழலை “படைப்பாற்றல் மிக்க தடுப்பாற்றல்” (Creative Resistance) மூலம் வென்று காட்டுவோம் எனவும் அவர் உறுதியளித்தார். வெனிசுலாவுடனான உறவு வெனிசுலாவுடனான உறவானது இரு நாடுகளுக்கு இடையிலான வெறும் பண்டமாற்று முறை மட்டுமல்ல இது ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் சகோதரத்துவம். கியூபா தனது மருத்துவச் சேவையை வழங்குகிறது, அதற்கு ஈடாக வெனி சுலா எரிபொருளை வழங்குகிறது. சமீப காலமாக கடல் வழியாக அமெரிக்கா செய்து வரும் முற்றுகையினால் இந்த எரிபொருள் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது.வெனிசுலா அரசு ஒத்து ழைப்பை விரும்பும் வரை, கியூபா என்றும் தோள் கொடுக்கும் என்று அவர் தெரி வித்தார். கியூபா தனித்து விடப்படவில்லை அமெரிக்காவின் எரிசக்தி முற்றுகை க்குப் பிறகு, சர்வதேச அளவில் கியூபா விற்கு ஆதரவு பெருகியுள்ளதாகவும் அவர் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் ஆகியோர் கியூபா விற்கு தங்களது முழு ஆதரவைத் தொலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி யுள்ளனர். “எதிரி கியூபாவிற்கான அனை த்து வழிகளையும் அடைக்கப் பார்க்கி றான். ஆனால் நான் பொறுப்புடன் கூறுகிறேன், கியூபா தனித்து விடப்பட வில்லை பல நாடுகள் மற்றும் நிறுவனங் கள் எங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளன” என்றார். பலதரப்பு உறவுகளை பாதுகாக்க வேண்டும் உலகம் அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கத்திற்கு (Hegemony) அடிபணி யக்கூடாது. இது ஒரு சித்தாந்த மற்றும் கலாச்சாரப் போர். மக்கள் தங்கள் அடையாளத்தை மறந்து, அமெரிக்கா வின் கலாச்சாரத்தை ஏற்கும் வகையில் இந்தப் போர் நடத்தப்படுகிறது. பிரிக்ஸ், ஜி-77 மற்றும் அணிசேரா நாடுகள் போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் இந்த “பாசிச” நடவ டிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கியூபா எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் அதற்கு சில அடிப் படை கொள்கைகள் உள்ளன. அவர்கள் அச்சுறுத்தல்களை முன்னெடுத்தால் அதற்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடக் காது. இரு நாடுகளும் சம அந்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கியூபாவின் சுயாட்சி மதிக்கப்பட வேண் டும். எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது. கியூபா மக்கள் அமெரிக்க மக்களை வெறுப்பதில்லை. அவர்களது கலாச்சா ரத்தையும் வரலாற்றையும் மதிக்கிறோம். விஞ்ஞானம், விளையாட்டு, மதம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அமெரிக்காவின் “திமிர் பிடித்த மற்றும் குற்றவியல் கொள்கையான” தடைகளும் தாக்குதல்களும் அதனைத் தடுக்கிறது என்று கூறியுள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%