news Breaking News
clock

அம்மாவின் மெளனம்

அம்மாவின் மெளனம்



அம்மாவாக நான் 

வாழும் போது

உணர்கிறேன் அவள் மெளனத்தை...


என் பிள்ளையின் 

கண்ணீர் துடைக்கும் போது

நினைவில் வந்தன

அவள் விரல்கள்...


என் சோர்வை 

சிரிப்பில் மறைக்கும் போது

புரிந்துகொண்டேன்

அவள் வாழ்வை...


உள்ளம் சுமந்த ஆசைகளும்,

பெருகி வழிந்த அன்பும் 

சொல்லாமல் சுமந்த வலியும்...


கடந்த அம்மாவின்

மௌனமாக உலகத்தை

நானும் சத்தமில்லாமல் 

கற்று கொண்டேன்


அவள் மெளனத்தின் மொழி

தினசரி வாழ்வில் இணைய,


அவள் தியாகத்தின் சுவடு

என் நிழலோடு இணங்க,


குழந்தையின் மூச்சில் கூட

அவள் நினைவு கலந்திருக்க,


'அம்மா' என்ற சொல்

அம்மாவான பின் விளங்கிட,


அன்பை வார்த்தையாக்காத

அவள் உலகின் ரகசியம்

வரமாகப் பெற்ற 

மகள்களுக்கு மட்டுமே

தெரியும் அதிசயம்.


நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News