
ஒரு இந்தியன் விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான். அவன் அருகே சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் இந்தியனை எப்படியும் ஏமாற்றி பணம் பறித்து விடவேண்டும் என எண்ணினான். இந்தியனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்..
சீனன்: ”அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது. நமக்குள் போட்டி வைத்து நேரத்தை கடத்துவோமா..?”
இந்தியன்: “வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை.. எனக்கு தூக்கம் வருகிறது...”
சீனன்: “அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய் நீங்கள் எனக்கு தரவேண்டும்.. போட்டிக்கு இப்போது சம்மதமா..?
இந்தியன்: “நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னேனே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..
சீனன்: (விடுவதாக இல்லை) “சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று நான் தோற்றால் 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..?
இந்தியன்: “சரி..சம்மதம்...”
சீனன்: ” போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்.. நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..?
இந்தியன்: ”தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..”
சீனன்: “மகிழ்ச்சி நண்பரே..”
இந்தியன்: “நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?”
சீனன்: “கேளுங்கள்..”
இந்தியன்: “ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும். அது என்ன விலங்கு..?
சீனன்: ( அதிர்ச்சியானான், நீண்ட நேரம் யோசித்து விட்டு ) “தெரியவில்லை.. 500 ரூபாயை பிடியுங்கள்..”
இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..
சீனன்: “ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..?
இந்தியன்: எனக்கும் தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..
யாருகிட்ட
இந்தியன்டா....
🕺🕺🕺🕺🕺
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?