news Breaking News
clock

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 943 கடைகள் மூடல், ரூ.2.57 கோடி அபராதம்: கலெக்டர் அதிரடி

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 943 கடைகள் மூடல், ரூ.2.57 கோடி அபராதம்: கலெக்டர் அதிரடி



ஈரோடு, பிப். –


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக ஈரோடு மாவட்டத்தில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத் துறை, கல்வித்துறை அதிகாரி கள் இணைந்து பள்ளி, கல்லூரிகள் அருகிலுள்ள கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்து, கடைகள் மூடப்பட்டு வருகின்றன.


2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 943 கடைகள் மூடப்பட்டு, ரூ.2,57,25,000 அபராதம் விதிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 4,783 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான அழிப்புக் குழு முன்னிலையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டன.


இந்நிலையில் சத்தியமங்க லம் நீதிமன்றம் சாலை பகுதியில் உள்ள ஹனிபா பெட்டிக் கடையில், தமிழக அரசின் தடையை மீறி நான்காவது முறையாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் கிடைத்தது. ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் மாநக ராட்சி உணவு பாதுகாப்பு அலு வலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு 1.25 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தது. தொடர்ந்து வணிகத் தைத் தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், உள்ளாட்சித் துறை வழங்கிய தொழில் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.


நான்காவது முறையாக குற்றம் செய்த கடை உரிமை யாளருக்கு எதிராக மாவட்ட தீர்ப்பு வழங்கும் அலுவலக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தொடர்ச்சியான குற்றச்செயலுக்காக ரூ.1.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் போது சுகாதாரத்துறை, மாநக ராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


பள்ளி, கல்லூரிகள் மற்றும் உணவு வணிக நிறுவனங்கள் அருகில் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாகவும், வாகனங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.


தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை குறித்த புகார்களை 0424-2223545 மற்றும் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். புகார் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News