news Breaking News
clock

கூடலூரில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்: கலெக்டர் லட்சுமிபவ்யா ஆலோசனை

கூடலூரில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்: கலெக்டர் லட்சுமிபவ்யா ஆலோசனை



நீலகிரி, பிப்.


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (சேரங்கோடு பஜார்), கன்னம்வயல், மன்னாத்தி வயல், மரடி, கொன்னச்சல், கழிச்சல், அய்யன்கொல்லி, காவயல், மழவன் சேரம்பாடி, கொளப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம், சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


மேலும், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கக்குண்டி கிராமத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வில் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் (தேவாலா) கல்யாணகுமார், பந்தலூர் வட்டாட்சியர் சிராஜூதீன் நிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


-----------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News