10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நாகை மாவட்டம் மாநிலத்தில் சிறப்பிடம் பெற கலெக்டர் வாழ்த்து

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நாகை மாவட்டம் மாநிலத்தில் சிறப்பிடம் பெற கலெக்டர் வாழ்த்து



நாகப்பட்டினம், பிப். -


நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி விகிதத்தைப் பெற்று, மாநில அளவில் மாவட்டம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ப. ஆகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து கலெக்டர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-


ஆசிரியர் என்பவர் கற்பித்தல் பணியை மட்டும் செய்பவர் அல்ல; அவர் ஒரு உளவியலாளர், ஆலோசகர், ஊக்குவிப்பாளர் மற்றும் சிறந்த வழிகாட்டியாக இருந்து சமூக முன்னேற்றத்திற்காகப் பங்காற்றுபவர். மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதன் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தையே ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள். அத்தகைய அறப்பணியை அர்ப்பணிப்புடன் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அரசுப் பொதுத் தேர்வு நெருங்கும் இக்காலத்தில், ஆசிரியர்கள் மிகுந்த பொறுப்புடனும் கவனமுடனும் செயல்பட்டு, மாணவர்களுக்கு ஏற்படும் தயக்கம் மற்றும் அச்சத்தைப் போக்கி அவர்களைஊக்கப்படுத்த வேண்டும். தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியர்கள் தங்களின் பள்ளி வாழ்க்கையில் ஒரு முக்கியத் தருணத்தில் இப்போது உள்ளீர்கள். எனவே, தேர்வு குறித்த தேவையற்ற அச்சமோ அல்லது பதற்றமோ இன்றி தேர்வை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.


நீங்கள் இதுவரை எழுதிய தேர்வுகளைப் போன்றதுதான் இந்த பொதுத் தேர்வும். உங்கள் கவனத்தைச் சிதற விடாமல், படிப்பின் மீது முழு ஈடுபாடு காட்டிப் படியுங்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று, வாழ்வின் உயரிய பண்புகளை அடைய வேண்டும் என்று மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%