news Breaking News
clock

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்’ என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்’ என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.



தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்த நிலையில் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிகவினருடன் உறுதிமொழி ஏற்றதுடன், மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-.


திமுக உடன் கூட்டணி என்பது ஒட்டுமொத்த தேமுதிக தொண்டர்களின் விருப்பம். அது தான் என் விருப்பம். அவர்கள் முடிவு தான் என் முடிவு. தி.மு.க.வோடு கூட்டணி முதல் முறை என்றாலும், விஜயகாந்த்தும், கருணாநிதியும் பல ஆண்டுகளாக நட்பில் இருந்தவர்கள். எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். பல ஆண்டுகளாக அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் நெருக்கமாக பழகியவர்கள். தற்போது விஜயகாந்த்தும் இல்லை, கருணாநிதியும் இல்லை. அவர்கள் ஆசியோடு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.


2016ம் ஆண்டு பழம் நழுவி பாலில் விழப்போகிறது என்று கலைஞர் சொன்னார். இன்று 10 ஆண்டு கழித்து பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்திருக்கிறது.


இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளோம். 2026 தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 200க்கும் அதிகமான தொகுதிகள் வெல்லும்.


எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதிகள் என்பது பற்றி எல்லாம் பேச எங்கள் தரப்பில் குழு அமைத்து பேச்சு நடத்துவோம். முடிவை ஸ்டாலின் அறிவிப்பார். அது தான் கூட்டணி தர்மம்.


அனைவரும் தோழமை கட்சிகள் தான். பலரின் கற்பனைகளுக்கும் தே.மு.தி.க. இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


கூட்டணி ஆட்சி அமைந்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது. அதில் நான் உறுதியாக உள்ளேன். கூட்டணி என்பது தேர்தலுக்கானது. அதேபோல் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கும் என நம்புகிறேன். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.


இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News