சிறுமலர் செடி வளர்ப்போம்

சிறுமலர் செடி வளர்ப்போம்


செடி நடுவோம்.. விதை நடுவோம்.. சிறு மணல் பரப்பினிலே..!

கொடி வளர்ப்போம்.. குலம் நினைப்போம்..

குழந்தைகள் பூமியிலே.!


படிப்படியாய்.. பாரினிலே.. இயற்கையைப் காத்திடுவோம்..

செடி வளர்த்தே.. கொடி வளர்த்தே.. சிந்தனையை வளர்ப்போம்.!

        (செடி நடுவோம்..)


ஆயிரம் விதைகளை விதைத்து.. அதில் அரும்பிடும் துளிர்களை நினைத்து.. வாழிய உலகென்று வாழ்த்திடும் காலையில்.. வரிசையாய் செடிகளை வளர்ப்போம்.!


மானுடராய் பிறந்த பின்னே.. மரம் செடி.. கொடிகள் வைப்போம்.. காணுகிற பூமியினை அன்பினில்.. அலங்கரிப்போம்.!

      (செடி நடுவோம்..)

   *வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%