உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி பூஜை முன்னிட்டு பந்தக்கால் நடும் வைபவம்:

செய்யாறு செப். 11,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் பந்தகால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காஞ்சிபுரம் -வந்தவாசி நெடுஞ்சாலையில் கூழமந்தல் கிராமம் அடுத்து உள்ளது . அதை அடுத்து உக்கல் கிராமம் .இங்கு ஸ்ரீ காமாட்சி அம்பாள் எழுந்தருளியுள்ளார்.
வரும் 21ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் நவராத்திரி பூஜை துவங்க உள்ள நிலையில், நேற்று பந்தக்கால் நடும் வைபவத்தை ஆலய குரு சங்கர் குருஜி முன்னின்று நடத்தினார் .லோகேஸ்வர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட ஆலய அர்ச்சகர்கள் உடன் இருந்தனர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை தலைவர் எஸ் .பிரபு, செயலாளர் பி .லட்சுமி உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?