உனது கரங்களில் உலகம்

உனது கரங்களில் உலகம்


என்றும் என்றும் நன்மை வழிச் செல்வோம்.!

இதயத்தில் இறைவனைத் தொழுவோம்.! 

ஒன்று வழித் திருக்குறள் என்போம்.!

உலகத்தில் சிகரத்தைத் தொடுவோம்.!


காலம் என்பது கடந்து போவது.. கருணை என்பதோ நிலைத்து வாழ்வது.. நாளை என்பது நமக்கு ஆனது.. நன்மை புரிவதே கடமை யானது.!

     (என்றும்..என்றும்..)

தடைகளை வென்று வாழ்ந்து காட்டிடு.. தருமத்தின் பாதையில் துணிந்து நடந்திடு.. 

உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்..

உலகம் முழுவதும் உனக்கு ஆனது..!

  (என்றும்..என்றும்..)

எழுந்து பாரடா.. எழுட்சி தோன்றுமே.. இரக்கம் வைய்யடா உயிர்கள் வணங்குமே.. உழைத்து வாழடா.. உலகம் வாழ்த்துமே.. உனது கரங்களில் உலகம் சுழலுமே..!

  (என்றும்..என்றும்..)

 

வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%