ஐரோப்பிய ஒன்றியம் – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: பொருளாதார உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியம் – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: பொருளாதார உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தல்

பிரஸல்ஸ், ஜூலை 28- ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார உறுதித்தன்மையையும் வேலைவாய்ப்பு பாதுகாப்பையும் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மூத்த எம்.பியான பெர்ண்ட் லாங்கே கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் உட்பட பல நாடுகளின் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வர்த்தகப் போரை துவங்கியது. இதன் பிறகு அமெரிக்கவுடன் வர்த் தகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்நாடு களை டிரம்ப் மிரட்டி வந்தார். அதன்படி பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தி வருகின்றன.சில நாடுகளுடன் இன்னும் இறுதியாக வில்லை என்பதால் ஆகஸ்ட் 1 வரை பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் கொடுத்துள்ளார். தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் மட்டிரும் டிரம்ப்பும் நடத்திய சந்திப்பிற்கு பிறகு வர்த்தக ஒப்பந்தம் எட்டப் பட்டதாக அறிவித்தனர். இந்த ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்கள் மீது 15 சதவீதம் வரி இருக்கும் என டிரம்ப் அறி வித்துள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெ ரிக்காவிடம் இருந்து 750 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிசக்திகளை வாங்கவும், அமெரிக்காவில் அந்த நாடுகள் சுமார் 600 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்யவும் வேண்டும் என ஒப்பந் தத்தில் கையெழுத்தாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிபொருள் மிக அவசியமானதாகும். குளிர் காலத்தில் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. இந்நாடுகளுக்கு ரஷ்யாவே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் பிரதான நாடாக இருந்து வந்தது. ஆனால் உக்ரைன் உடனான போர் துவங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் எரி பொருள் வாங்குவது பெருமளவு நின்று விட்டது. இந்நிலையில் அந்நாடுகள் அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் வாங்கி வருகின்றன. அது அதிக விலையில் விற்கப்படுவதால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் எரி பொருள் விலைகள் உயர்ந்துள்ளன. ஏற்கனவே பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவரு மான பெர்ண்ட் லாங்கே அமெரிக்காவின் ஒப்பந்தம் “திருப்தியற்றது” மற்றும் “மோசமாக சமநிலையற்றது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.ஏற்கனவே நடைமுறையில் இருந்த வரியின் சராசரி அளவை விட தற்போதைய ஒப்பந்த அடிப்படையிலான வரி விகிதம் நான்கு மடங்கு அதிகம் என்றும், அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கப் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க (வரிகளே விதிக்காமல்) கூட ஒப்புக்கொள் ளும். “இது ஒரு சார்பு கொண்ட ஒப்பந்தம். வெளிப்படையா கவே, ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். “ஒட்டுமொத்தமாக, இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றி யத்தின் பொருளாதார வளர்ச்சியை பலவீனப்படுத்தவும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கவும் செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%