ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு

ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு

புதுடெல்லி:

ஒடி​சா​வின் 4 முக்​கிய மாவட்​டங்​களில் இந்​திய தொல்​லியல் துறை நடத்​திய ஆய்​வில் 10 முதல் 20 டன் அளவுக்கு தங்​கம் இருக்​கலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.


ஒடி​சா​வின் பல மாவட்​டங்​களில் மண்​ணில் புதைந்​துள்ள கனிமங்​கள் குறித்து இந்​திய தொல்​லியல் துறை ஆய்வு மேற்​கொண்​டது. இதில் தியோகர், சுந்​தர்​கர், நபரங்​பூர், கியோன்​ஜர், அங்​குல் மற்​றும் கோராபுட் ஆகிய பகு​தி​களில் தங்க கனிமங்​கள் இருப்​பது உறு​திபடுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், மயூர்​பன்ச், மல்​கன்​கிரி, சம்​பல்​பூர் மற்​றும் பவுத் ஆகிய இடங்​களில் ஆய்​வு​கள் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக , ஒடிசா தங்க சுரங்​க​மாக மாறவுள்​ளது. இங்கு 10 முதல் 20 மெட்​ரிக் டன்​கள் அளவுக்கு தங்​கம் இருக்​கலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஒடி​சா​வின் பல பகு​தி​களில் தங்​கம் இருப்​ப​தை, ஒடிசா சுரங்​கத்​துறை அமைச்​சர் கடந்த மார்ச் மாதமே ஒடிசா சட்​டப்​பேர​வை​யில் அறி​வித்​தார். இதனால் இங்கு தங்க சுரங்​கம் தோண்​டு​வதற்​கான ஏலம் விரை​வில் நடை​பெறும் எனத் தெரி​கிறது.


இந்​தியா கடந்த ஆண்​டில் 700 முதல் 800 மெட்​ரிக் டன் தங்​கத்தை இறக்​குமதி செய்​தது. நாட்​டின் உள்​நாட்டு தங்க உற்​பத்தி ஆண்​டுக்கு 1.6 டன்​கள் என்ற அளவிலேயே உள்​ளது. ஒடி​சா​வில் தங்​கம் எடுக்​கப்​பட்​டால், இந்​தி​யா​வில் உள்​நாட்டு தங்​கம் உற்​பத்தி அதி​கரிக்​கும். இறக்​கும​தி​யும் ஓரளவு குறை​யும்.


முதல் கட்​ட​மாக ஒடி​சா​வின் தியோகர் பகு​தி​யில் தங்க சுரங்​கத்தை ஏலம் விடு​வதற்​கான பணி​களை ஒடிசா அரசு, ஒடிசா சுரங்க கார்​பரேஷன், இந்​திய தொல்​லியல் துறை ஆகியவை விரைவு படுத்​தி​யுள்​ளன. இதன் மூலம் ஒடி​சா​வில் போக்​கு​வரத்​து, கட்​டமைப்பு வசதி​கள் மேம்​பட்டு பொருளா​தார வளர்ச்​சி​யும்​ அதி​கரிக்​கும்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%