வாக்காளர் உரிமையை நிலைநாட்ட பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி

வாக்காளர் உரிமையை நிலைநாட்ட பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி

பிஹார் மாநிலம் சசாரமில் இண்டியா கூட்டணி சார்பில் ‘‘வாக்காளர் அதிகார யாத்திரை’’ நேற்று தொடங்கியது. இதில், பங்கேற்க வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தியை ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது ஜீப்பில் அழைத்து சென்றார். அப்போது, ராகுல் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.படம்: பிடிஐ

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் உரிமையை நிலைநாட்டுவதற்கான யாத்​திரையை மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்​தார். இதற்​கான விழா​வில், காங்​கிரஸ் கட்சி தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​வர்​கள் லாலு பிர​சாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.


பிஹாரில் விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில், சசா​ரமில் தொடங்​கிய இந்த யாத்​திரை​யின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்​களிடையே வாக்​காளர் திருட்​டுக்கு எதி​ரான பிரச்​சா​ரங்​களை இந்​தியா கூட்​டணி முடுக்கி விட உள்​ளது.


யாத்​திரை தொடக்க விழா​வின்​போது ராகுல் பேசும்போது, ‘‘இந்த யாத்​திரை அரசி​யலமைப்பை காப்​பாற்​று​வதற்​கான போ​ராட்​டம். நாடு முழு​வ​தி​லும் சட்​டமன்ற தேர்​தல்​கள், மக்​களவை தேர்​தல்​கள் திருடப்​படு​கின்​றன.


பிஹாரில் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொண்டு வாக்​காளர்​களை நீக்​கு​வது மற்​றும் சேர்ப்​ப​தன் மூலம் வாக்​கு​களை திருட ஒரு புதிய சதி செய்​யப்​பட்​டுள்​ளது. பிஹாரில் தேர்​தல்​களை திருட நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம்.ஏழைகளிடம் மிஞ்​சி​யுள்​ளது வாக்​குரிமை மட்​டுமே. அதை​யும் அவர்​கள் பறித்​துக்​கொள்ள நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம்’’ என்றார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%