கடலூரில் 650 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்
கடலூர், பிப். –
கடலூர் நகர்புற இடங்களில் வசிக்கும் 650 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை கடலூர் நகர அரங்கில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் உத்தரவின்படி, பொதுமக்கள் அனைவருக்கும் நிரந்தர குடியிருப்பு இருக்கும் வேண்டும் என்ற அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் தகுதிவாய்ந்த நிலமற்ற பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தேவனாம்பட்டினம் கிராமத்தில் 2004ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் நோக்கத்தில் மேற்படி நகர வார்டு-6 பிளாக்-46 இதற்குட்பட்ட பட்டாதாரர் பெயரில் உள்ள 8.3024.5 சமீ பரப்பு நிலத்தினை தமிழ்நாடு அரசின் பெயரில் கிரையம் பெற்று, "சுனாமி குடியிருப்பு" என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விடத்தில் 648 நபர்களுக்கு 2007ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் மூலம் சுனாமி வீடுகள் கட்டப்பட்டு, 2014–-2015ஆம் ஆண்டு ஒப்படை நமூனா வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நீண்டகால பட்டா வழங்கும் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் மஞ்சக்குப்பம் பகுதியில் 171 நபர்களுக்கும் மற்றும் திருப்பா திரிப்புலியூர் பகுதியில் 104 நபர்களுக்கும் என மொத்தம் இன்றைய தினம் கடலூர் நகர்புற இடங்களில் வசிக்கும் 650 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், வருவாய் வட்டாட்சியர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?