தேனி,பிப்.
- தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் ராட்டினம் இயக்குவதற்கான நேர நிர்ணயம் செய்யாததால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் மே 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 24 மணி நேரமும் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவதுடன், இரவு முழுவதும் கலைநிகழ்ச்சி, ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இந்த ஆண்டு ராட்டினம் அமைத்தல் உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிக்கான ஏலம் நடைபெற்றது. அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்தி தலைமை வகித்தார். ஒப்பந்தகாரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் ரூ.56 லட்சத்து 71 ஆயிரத்துக்கு முடி காணிக்கை, கண்மலர் மற்றும் உணவுக் கூடம் அமைப்பதற்காக ஏலம் விடப்பட்டது. பின்பு இயந்திர ராட்டினங்களுக்கான ஏலம் தொடங்கியது. அப்போது, கடந்தாண்டு திருவிழா வில் ராட்டினங்களுக்கான நேரம் இரவு 12 மணியாக குறைக்கப்பட்டதால், தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற் பட்டதாக ஒப்பந்தகாரர்கள் குற்றம் சாட்டினர். ஆகவே நேரம் நிர்ணயம் குறித்து அறநிலை யத்துறை தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கேட்டனர். அதற்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் கூறுகையில், நேர நிர்ணயம் என்பது மாவட்ட நிர்வா கத்தின் முடிவுக்கு உட்பட்டது. ஆகவே அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என்றனர். அதனை ஏற்க மறுத்த ஒப்பந்ததாரர்கள் ஏலத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து மறுதேதி குறிப்பிடாமல் ஏல தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?