தேனியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தேனியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்



தேனி ,பிப்.

பெரியகுளம் அருகே பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்ப டையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் ஊதி யத்தில் தொழில் வரி பிடித்தம் செய்வதாக புகார் தெரி வித்து. தேனி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 2 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூ ராட்சியில் 25-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படை யில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்தில் தொழில் வரியாக மாதம் 1,250 ரூபாய் பிடித்தம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் எவ்வித பிடித்ததும் செய்யக்கூடாது என்ற தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவையும் மீறி, தொழில் வரி என்ற பெயரில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பணத்திற்கு முறையான கணக்கு விவரங்களை பேரூராட்சி நிர்வாகம் தர மறுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் உரிய விளக்கம் அளிக்க மறுப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தூய்மைப் பணியாளர்களிடம் தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்யக்கோரி வெள்ளியன்று சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தேனியில் உள்ள பேரூராட்சி கள் மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அவர்களுடன் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்க நிர்வாகிகளும் உடன் வந்தனர். ஆனால் உதவி இயக்குநர் இல்லாததால் அவரது அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் அங்கு வந்த பேரூராட்சிகள் உதவி இயக்குநர் வில்லியம்ஸ் யேசு தாஸ் தூய்மைப் பணியாளர்களின் புகார் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%