news Breaking News
clock

கணித ஆசிரியருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கணித ஆசிரியருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பாராட்டு



மயிலாடுதுறை , பிப் , 04 -

மயிலாடுதுறையில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2024-2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 

இதில் சின்னங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்தராஜ் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணித பாடத்தில் 100 % தேர்ச்சி பெற்று கொடுத்தமைக்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சின்னங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகையன்,

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பானுமதி, சின்னங்குடி ஊர் பஞ்சாயத்தார்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு பெற்ற ஆசிரியர் ஆனந்தராஜ்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News