கவிதைகள்

கவிதைகள்


*🌹✍️இனிப்பு*


*தீபாவளி*

*பொங்கல்*

*ரம்ஜான்*

*கிறிஸ்துமஸ்*

*என*

*எது வந்தாலும்*

*எனக்குத்*

*தவறாமல் கிடைப்பது*

*உன்*

*மு த் த ங் க ள் தா ன்!*



*🌹✍️தனியழகு*


*உன்*

*திருக் குரலால்*

*கேட்கும் போது*

*திருக்குறள் கூட*

*தனி அழகாக இருக்கிறதென்று*

*மிகைப்படுத்திச் சொல்கிறாய்!*

*உனக்கு தான்*

*என் மீது*

*என்ன அதீதமான*

*கா த ல்!*



*🌹✍️தென்றல்*


*நீ*

*வரும் போது*

*வீசும் காற்று மட்டும்*

*எந்த திசையிலிருந்து*

*வந்தாலும்*

*அது*

*தென்றலாகவே மாறி விடுகிறது!*



*🌹✍️களவாணி(யே!)*


*என்*

*உள்ளம் கவர்ந்த கள்வி*

*நீ!*

*ஆனால்*

*ஒவ்வொரு முறை*

*சந்திக்க வரும் போதும்*

*என்*

*கன்னம் கிள்ளிக்*

*களவாணி என்று கொஞ்சுகிறாய்!*



முத்து ஆனந்த்

வேலூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%