காரியமே வீரியம்

காரியமே வீரியம்



இரண்டு சிறகுகள் விழுந்தால்தான்

நான்கு சிறகுகள் முளைத்து

சிறகடித்து பறக்கிறது பறவை,


இரண்டு இலைகள் பழுத்தால்தான்

நான்கு இலைகள் துளிர்விட்டு

வளர்ந்து நிழல்தருகிறது மரம,


இரண்டுப்பேர் இறந்தால்தான்

நான்கு பேர் பிறந்து

சுழற்ச்சியடைகிறது வாழ்க்கை,


அதிக நேரம் மகிழ்ச்சியால்

திளைத்தாலும்

ஏதோ ஒரு சோகத்திற்காக

ஏன் நண்பா

துவண்டுப்போகிறாய்?!


நாளைய வெற்றி நமக்கானது

கவலையை கிடப்பில் போட்டு

காரியத்தில் இறங்கு தோழனே,,,




நாகை ஆசைத்தம்பி

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%