தடுமாறும் தலைமுறைகள்.

தடுமாறும் தலைமுறைகள்.


பழையன கழிதலும்,

புதியன புகுதலும் –

வழி வழி வந்த

வழக்க மன்றோ!


முதிரும் பருவம்,

உதிரும் சருகாய்

அசையென நினைவுகள் –

அலையென ஆயிரம்.


இனிதென நினைத்தவை

கரைவதை அறிவோம்;

இனி அவை வருமோ? –

ஏங்குதல் இயல்பே.


மனநிலை யாவும்

மாறிட வேண்டும்;

மாற்றம் நாடிடும்

தலைமுறைகள் கூடி.


புதுமை பல பல

தேடுதல் இயற்கை;

செயற்கை அறிவின்

ஜனனம் கண்டோம்.


இனிதான் வருமே

அறிவியல் ஆட்டம்.

தோற்றோம் என நாம்

ஒரு கணம் நினையோம்.


ஏற்போம் எதையும்

இனிதென அமைய –

கால ஓட்டத்தில்

இணைந்திடுவோமே



சுந்தர மணிவண்ணன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%