news Breaking News
clock

"ஓசை கடந்த உலகில்"

"ஓசை கடந்த உலகில்"



காதில் ஹெட்போன்.

மனதை வருடும் மெல்லிய இசை.

வாழ்க்கை சத்தங்களை மூடிக் கொள்ளும் அளவுக்கு இனிமையாய்.


ராதா சமையலறையில் இருந்தாள்.

ஒரு கையில் கரண்டி, மற்றொரு கையில் கைபேசி. காதுகளில் ஹெட்போன்.


பாடல் வரிகளோடு சேர்ந்து அவளும் மனதிற்குள் பாடிக் கொண்டிருந்தாள்.


முன் ஹாலிலிருந்து குழந்தையின் அலறல் வந்தது வித்தியாசமான தொணியில்.


"ஹீய்ய்ய்ய்ய்ய்" எனும் ஹீனக்குரல்.


எதுவும் ராதாவின் காதுகளில் விழவில்லை.


ஹாலிம் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை, சுவர் அருகே தொங்கிக் கொண்டிருந்த சார்ஜர் வயரைப் பார்த்தது. அதையும் ஒரு பொம்மையாய் நினைத்துக் கொண்டு

இழுத்தது.


வாயில் வைத்துக் கடித்தது. பற்கள் பதிந்தன.


ஒரு நொடி.

ஒரே ஒரு நொடி.


மின்சாரம் தாக்கிய உடல் துடித்து அடங்கியது.


சமையலறையில் ஒரு பாடல் முடிந்ததும், அடுத்த பாடல் துவங்கும் முன் அவள் ஹெட்போனைக் கழற்றினாள்.


முன் ஹாலில் அதீத அமைதி.


ஒரு நெருடலுடன் அங்கிருந்தா அழைத்தாள். 'கண்ணா…?”


பதில் இல்லை.


ஹாலுக்கு ஓடினாள். குழந்தை தரையில் கிடந்தது. நல்லவேளையாய் சார்ஜர் வயர் அதன் கைகளில் இல்லை.


கண்கள் திறந்திருந்தன.


ஆனால் மார்புக்கூடு ஏறி இறங்கவில்லை.


கத்தினாள். அழுதாள். அள்ளிக் கொண்டாள்.


பக்கத்து வீட்டார் உதவியோடு மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினாள்.


“ஒரு பதினைந்து நிமிடம் முன்னாடியே…வந்திருந்தா...”


அந்த வாக்கியம் அவளுக்குள் மின்சாரம் போல இறங்கியது.


இப்போதெல்லாம் ராதா பாடல் கேட்பதில்லை. ஹெட்போனைத் தொடுவதில்லை.


(முற்றும்)



முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News