news Breaking News
clock

குழந்தையின் மனது !

குழந்தையின் மனது !



செங்கல்பட்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்து டிக்கெட் வாங்கி படியேறி னேன்.என் வலது கையைப் பிடித்தபடி

ஏறிய என் பேத்தி , " தாத்தா ! இங்க பென்குயின் இருக்கு. காட்டறேன் வா ! " என்றாள்.


" அப்படியா, குழந்தே ! " என்ற என் காதில்என் மகள் , " அப்பா ! பார்த்தால் வாழ்க்கையே உங்களுக்குவெறுத்துப் போகும் " என்று கிசு கிசுத்தாள்.


கடைசி படியில் கால் வைத்து இறங்கி வலது பக்கமாக திரும்பியவுடன் சட் டென என்னிடமிருந்து தன் கையை உதறிக் கொண்ட பேத்தி , " தாத்தா ! பார்த்தியாபெங்குயின் !" இருகரம் தட்டி குதூகலுத்துடன் சிரித்தாள்.


மூன்றடி உயரத்தில் ஒரு பென்குயின்

பொம்மை குப்பைத் தொட்டியாக நின்று கொண்டிருந்தது.


பேத்தியின் முகம் இன்னும் குதூக லுத்துடன் காணப்பட்டது ! " தாத்தா ! எப்படியிருக்கு பென்குயின் ? " 


"ம். ஜோராயிருக்குடா.." உடனே பேத்தி

யின் முகம் சந்தோஷத்தில் விரிந்தது.

" நல்ல தாத்தா " எனச் சொல்லி என் கையில் முத்தமிட்டது.


குழந்தைக்கு மெய் எது, பொய் எது என்று தெரியாது. பார்ப்பதை மனத் தில் பதிய விட்டு அதன்படி ரியாக்ட் செய்யும். அதற்கு நாம் ஒப்புதல்அளிக் கும் பட்சத்தில் அதன் மனம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடையும்.


மாறாக நான் நெகடிவ்வாக அதன் கேள்விக்கு பதில் சொல்லியிரு ந்தேனானால் அதன் மனசு ஒடிஞ்சு போயிருக்கும். என்னிடம்பேசாது. வீடு வரை முகத்தைத் தூக்கி வச்சிட்டு வரும்.


இப்படித்தான் எனக்குத் தெரிந்த நண்பர்ஒருவரின் மகன். யாரிடமோ பணம் கடன் வாங்கிவிட்டு கடன் கொடுத்தவனைச் சந்திப்பதை தவிர்த்து வந்தான்.


ஒருநாள் கடன் கொடுத்தவன் கடன் வாங்கியவன் வீட்டுக்கு வர இருப்ப தாக தகவல் கிடைத்தது. உடனே பதற் றமானவன் சமையல் கட்டில் வேலை யாக இருந்த தன் மனைவியிடம் , " ரம்யா, கொடுத்த கடனை திருப்பிக் கேட்க பாவிப் பயல் இன்னும் அஞ்சு நிமிஷத்தில வரப் போறானாம். நான் படுக்கை ரூம்ல லாக் பண்ணி உள்ள இருந்துக்கிறேன். அவன் கேட்டால் நான் வெளியூர் போயிருக்கேன் வர நாலஞ்சி நாளாகும்னு சொல்லிஎப்ப டியாவது அவனை அனுப்பிவிடு !" 

என்றுவிட்டு சட்டென ஹாலை ஒட்டி இருந்த பெட்ரூமில் நுழைந்து லாக் செய்து கொண்டான்.


அடுத்த சில நிமிடங்களில் கடன் கொடுத்தவன் புயலெனநுழைந்தான். சத்தம் கேட்டு பட படப்புடன் கிச்சனிலி ருந்து வெளிப்பட்டாள் ரம்யா.


" உன் புருஷன் எங்கேம்மா ! கூப்பிடு

அவனை. ரூபா 25000 வாங்கி ஆறுமா சம்ஆச்சு. வட்டியும் தரல்ல. இன்னிக்கு

பணம் வாங்காம நகர மாட்டேன் " நாற்

காலியில் வாகாக அமர்ந்துகொண் டான்.


" சார்..கொஞ்சம் பொறுத்துக்குங்க. அவர் பணம் புரட்ட வெளியூர் போயிரு க்கார். ஒரு வாரத்துக்குள் பணம் உங்கள் கைக்கு கிடைத்துவிடும்.." 


" அப்படியா !" என்று அவன் எழுந்து

கொண்ட நேரம் , ஹாலின்மூலையில்

ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த ரம்

யாவின் மகன் " ஐயோ..அம்மா ! ஒன க்கு ஒண்ணும் தெரியல்ல. அப்பா ரூமுக்குள்ளதான் இருக்காரு. வெளி யூரல்லாம்போகல்ல ..." உண்மையைப் போட்டு உடைத்தான். அதன் பிறகு ஒரு களேபரமே ஏற்பட்டது. நடந்தது நாடகம் என்பதை குழந்தை அறிய நியாயமில்லை. தான் பார்த்ததை சரியாகச் சொல்லிவிட்டது.


குழந்தையாக இருக்கும்பொழுது அதன் மனத்தில் கள்ளம், கபடம் எதுவுமில்லை.வளர்ந்து பெரியவன் ஆகும்பொழுது மனம் வளர்ச்சி அடைகிறது. துன்பம், கவலை, மகிச்சி இவற்றை தரம் பிரித்து அதன்படி நடந்துகொள்கிறான். மனிதன்

மகிழ்ச்சியாகவே இருந்துவிட்டால் வாழ்வில் சுவை ஏது ? துன்பம் இருந் தால்தான் இன்பத்தின் அருமை தெரியும் ! நிழலின் அருமை வெய்யி லால் தெரிவது போல்.


சில சமயம் எல்லாம் தலைக்குமேல் போகும்பொழுது மனிதனுக்கு விரக்தி ஏற்படுகிறது.


      ' பிள்ளையாய் இருந்துவிட்டால்

       இல்லை ஒரு துன்பமடா ' 


கண்ணதாசனின் வைர வரிகளில் எத்

தனை எதார்த்தம் ! நடப்பதை எழுதி

வைத்துவிட்டு ஒரு தீர்க்கதரிசியாய்

சென்றிருக்கிறார்.


" அப்பா ! எப்பவும் கல கலப்பாய் இருப்பீர்கள். இன்னிக்கு மெளனமாக இருக்கீற்கள் ! " டிரெயின் ஓடிக்கொ ண்டிருக்க மகள் கேட்டாள்.


என் பக்கத்தில் ஜன்னலோரம் உட் கார்ந்திருந்த பேத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


மகளின் கேள்விக்கு பதில் ஒன்றும் கூறாமல் நானும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.


இரயில் ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்

தது.

                  .........................................

வி.கே.லக்ஷ்மிநாராயணன்

 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News