கோவையில் பேங்க் ஆப் பரோடாவின் வீட்டுமனை கண்காட்சி: 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

கோவையில் பேங்க் ஆப் பரோடாவின் வீட்டுமனை கண்காட்சி: 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு



கோவை, ஜன. 


கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், பேங்க் ஆப் பரோடா சார்பில் நடத்தப்படும் ‘ப்ரொபெர்டி பேர் 2026’ ரியல் எஸ்டேட் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.


கண்காட்சியை பேங்க் ஆப் பரோடா மண்டல மேலாளர் கமலக்கண்ணன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காவிரி பைப்ஸ் நிர்வாக இயக்குநர் வினோத் சிங் ரத்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கண்காட்சி குறித்து சாய் அபிமான் நிறுவனத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி தினேஷ்குமார் கூறியதாவது:


“கோவையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் ‘ப்ரொபெர்டி பேர் 2026’ கண்காட்சி, சிறந்த கட்டுமான நிறுவனங்கள், முன்னணி விளம்பரதாரர்கள் மற்றும் மனை விளம்பரதாரர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், மனைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறுகுடியிருப்பு திட்டங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.”


மேலும், தமிழ்நாட்டின் முன்னணி 50-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. மனைக்கடன், வீட்டுக்கடன் மற்றும் பல்வேறு கடன் சலுகைகள் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைந்து உடனடி முறையில் வழங்கப்படுவதாகவும், கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறைந்த முதலீட்டிலிருந்து அதிக மதிப்புள்ள திட்டங்கள் வரை பல்வேறு விருப்பங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.


கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து வீடு வாங்க விரும்புவோர் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.


கண்காட்சியின் ஒரு பகுதியாக, பார்வையாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை, சலுகை விலையில் ரத்த பரிசோதனை, இலவச மெஹந்தி மற்றும் டாட்டூ, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டன. மேலும், பதிவு செய்த பார்வையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணயம், இரண்டாம் பரிசாக வெள்ளி நாணயம் மற்றும் மூன்றாம் பரிசாக ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%