நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை

நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை



கரூர், ஜன. 


கரூர் மாவட்டம் பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் தங்கவேல்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் அவர் பேசுகையில், முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு அனைத்து வகையான உடல் பரிசோதனைகள், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.


இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு, குழந்தைகள் நலம், இதயநலம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் உணவியல் உள்ளிட்ட 17 சிறப்பு மருத்துவ சேவைகள், நிபுணர் மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன. அனைத்து பரிசோதனைகளும் ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படுகின்றன.


கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், படுக்கையிலிருப்போர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இம்முகாம்களின் பிரதான இலக்கு பயனாளர்களாக உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் 2025 ஆகஸ்ட் 2 முதல் 2026 ஜனவரி 22 வரை நடைபெற்ற முகாம்களின் மூலம் 12,540 ஆண்கள், 21,068 பெண்கள் என மொத்தம் 33,750 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும், 12 கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் ஊன்றுகோல் வழங்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை சார்பில் மூன்று தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், என்.நேருவுக்கு “நிக்ஷய் மித்ரா” சான்றிதழும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%