10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி:அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்,
Jan 27 2026
27
மயிலாடுதுறை, ஜன.
மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2024-–2025-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், 2024–-2025 ஆம் கல்வியாண்டில் அரசு / ஆதிதிராவிடர் நலன், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 53 பள்ளிகளும், அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளில் 53 பள்ளிகளும், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் சேர்த்து, 590 பட்டதாரி ஆசிரியர்களும், 510 முதுநிலை ஆசிரியர்களும், அவர்தம் பாடப்பிரிவுகளில் 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளனர்.
1100 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்:
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-–2025 ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வருப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 1100 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார்.
மேலும், நடப்பு கல்வியாண்டிலும் (2025-–2026) பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவ மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்திட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துகனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?