வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரச் செயல்முறை
Jan 27 2026
26
வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரச் செயல்முறை: நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா தொடங்கி வைத்தார்
விருதுநகர், ஜன.–
---விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்த விழிப்புணர்வுக்காக, நடமாடும் செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்- 2026 ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு வாகனம் வீதம் மொத்தம் 7 வாகனங்கள் மூலம் இளம் வாக்காளர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு செயல்முறை வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / கலெக்டரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிப்பதோடு, வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கவுள்ளது.
எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்கள் பகுதிகளுக்கு வரும் இந்த வாகனங்களை பயன்படுத்தி வாக்குப்பதிவு குறித்த செயல் விளக்கத்தை அறிந்து கொண்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?