news Breaking News
clock

தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் பெரோமோன் வலை: தேனியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் பெரோமோன் வலை: தேனியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு



ஆண்டிபட்டி, ஜன.–


தேனி மாவட்டம் மரிக்குண்டு கிராமத்தில் தென்னை மரங்களை தாக்கும் செம்பாம்பூச்சியை கட்டுப்படுத்த, பெரோமோன் வலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தேனி மாவட்டம், மரிக்குண்டு கிராமத்தில் தென்னை விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் சிவப்பு கூன் வண்டு (Red Palm Weevil) தாக்குதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரோமோன் வலை (Pheromone Trap) குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், மதுரை விவசாயக் கல்லூரி மாணவி டான்யா, ஆண்டிப்பட்டி குழு விவசாயிகளுக்கு மத்தியில் பேசுகையில், “சிவப்பு கூன் வண்டு தென்னை மரத்தின் உள்ளே புகுந்து தண்டு பகுதியை சேதப்படுத்துவதால், மரம் வெளிப்படையாக பாதிப்பு தெரியாமல் உலர்ந்து சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுகிறது” என தெரிவித்தார்.


2 வலைகள் போதும்:


மேலும் அவர் கூறுகையில், “பெரோமோன் வலை என்பது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையாகும். இதில் பயன்படுத்தப்படும் மணப்பொருள் சிவப்பு கூன் வண்டை ஈர்த்து வலையில் சிக்க வைப்பதால், அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 1–2 பெரோமோன் வலைகளை நிறுவுவதன் மூலம் சிவப்பு கூன் வண்டு தாக்குதலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த முடியும்” என்றார்.


மரிக்குண்டு கிராமத்தில் நடத்தப்பட்ட இந்த செயல் விளக்கத்தில், பெரோமோன் வலை அமைக்கும் முறை, பராமரிப்பு மற்றும் காலந்தோறும் பூச்சிகளை அகற்றுவது பற்றியும் விளக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இந்த முறையை தங்களது தென்னை தோட்டங்களில் பயன்படுத்த முன்வந்தனர். இந்த விழிப்புணர்வு நடவடிக்கை, தென்னை விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் பெரிதும் உதவும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News