திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் 462 பேருக்குப் பணி நியமன ஆணை: கலெக்டர் சரவணன் வழங்கினார்

திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் 462 பேருக்குப் பணி நியமன ஆணை: கலெக்டர் சரவணன் வழங்கினார்



திருச்சி, ஜன. –


திருச்சிராப்பள்ளி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.


இதில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட 462 பணிநாடுநர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். அப்போது பேசிய ஆட்சியர், பணி நியமனம் பெற்றவர்கள் தங்கள் பணிவாழ்வில் கடின உழைப்பையும், நேரம் தவறாமையையும் ஒரு கொள்கையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீனத் திறன்களைக் கற்றுக்கொண்டு, இளைஞர்கள் தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


4472 பேர் பங்கேற்பு:


இன்று நடைபெற்ற இந்த முகாமில் 2,145 ஆண்கள் மற்றும் 2,327 பெண்கள் என மொத்தம் 4,472 நபர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 22 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். முகாமில் பங்கேற்ற 201 தனியார்துறை நிறுவனங்கள் நேர்காணல்களை நடத்தின. இதன் முடிவில், 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட 462 நபர்கள் உடனடியாகப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகளைப் பெற்றனர். மேலும், 607 நபர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.


இந்நிகழ்வில் பயிற்சி உதவி ஆட்சியர் செல்வி சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) இரா.அருணகிரி, துணை இயக்குநர் ச.பிரபாவதி, உதவி இயக்குநர் செ.ரமேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் முனைவர் ஜா.பிரின்சி மெர்லின், வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலர் ப.ஈஸ்வர மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%