news Breaking News
clock

துறையூர் அடுத்த பச்சமலை பகுதியில் சிறு தானியங்கள் பதனிடும் மையம்

துறையூர் அடுத்த பச்சமலை பகுதியில் சிறு தானியங்கள் பதனிடும் மையம்

துறையூர் அடுத்த பச்சமலை பகுதியில் சிறு தானியங்கள் பதனிடும் மையம்

அருண் நேரு எம்பி தொடங்கி வைத்தார்


துறையூர், ஜன.25–


திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சமலையில் உள்ள நச்சிலிபட்டி கிராமத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.


விழாவில், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு கலந்துகொண்டு மையத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றியபோது கூறியதாவது:-


உடலுக்கு ஆரோக்கியம்:


சிறு தானியங்களின் பயன்பாடு சிறுக சிறுக அழிந்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறுதானியங்கள் பெருமளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது மீண்டும் சிறுதானியங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அவற்றை பயிரிட்டு பாரம்பரிய உணவு வகைகளை உண்ண வேண்டும், இதுவே உடலுக்கு ஆரோக்கியம் என கூறி விவசாயிகளையும் உற்சாகப்படுத்தினார்.


விழாவில், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், அண்ணாதுரை, வீரபத்திரன், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சரண்யா மோகன் தாஸ், நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, கிளை செயலாளர் மாணிக்கம் பாகிஸ் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயராணி, மாநில உணவு ஆணைய இயக்குனர் கணேசன், கல்லூரி பேராசிரியர்கள் ராஜ்குமார், மாசிலாமணி, சுதாகர், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ரம்ஜானி நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News