news Breaking News
clock

சந்தோஷம்

சந்தோஷம்



இன்னைக்கு எப்படியாவது ஜோதிடரைப் போய் பார்த்து விடவேண்டும் என்று முடிவு செய்த பரமசிவம், தன் மனைவியிடம் இன்னைக்கு நாள் நல்லா இருக்கா பார்த்து சொல்லு என்றார். 

மல்லிகாவும் காலண்டரைப் பார்த்தபடியே, இன்னைக்கு யோகமான நாளுன்னு போட்டிருக்கு...! அப்படின்னா... இன்னைக்கு நாம கட்டாயமா ஜோசியரைப் பார்த்துடலாம் என்றாள். 

தனது ஒரே மகள் லலிதாவுக்கு திருமணம் செய்வதற்கு வரன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், தரகர் அனுப்பியிருந்த பையனின் ஜாதகத்தை பரமசிவம் கடந்த ஒரு வாரமாக கையில் வைத்துக் கொண்டு தனது குடும்ப ஜோசியரை தேடிக் கொண்டிருந்தார். 

கடந்த சில நாட்களாக ஜோதிடர் 

தங்கமணி வெளியூர் சென்றிருந்ததால் பரமசிவத்தால் ஜோதிடரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

ஜோதிடர் தங்கமணி ஊருக்கு திரும்பி விட்ட தகவல் கிடைத்ததால், அவரை சந்திக்க பரமசிவமும் அவரது மனைவியும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டனர். 

பரமசிவத்தையும், மல்லிகாவையும் வரவேற்று தன் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார சொன்னார் ஜோதிடர். 

பரமசிவம் கொடுத்த பையன் ஜாதகத்தையும், ‌மகள் லலிதாவின் ஜாதகத்தையும் சேர்த்து பார்த்தபடியே சில குறிப்புகளை எழுதினார். கட்டங்களை வரைந்து கணக்குகளையும் போட்டுப் பார்த்தார். 

அரைமணிக்கு பிறகு 

பரமசிவத்தைப் பார்த்து இரண்டு ஜாதகத்திற்கும் ஏகபொருத்தமா இருக்கு! இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சா அவங்களோட வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும். 

சிறப்பா இருக்கும்னுங்கறதைவிட மகிழ்ச்சியா இருப்பாங்க... என்று ஜோதிடர் சொல்லி முடித்தார். 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மல்லிகா திடீரென்று பையனுக்கு தோஷம் ஏதுமில்லியே என்று ஜோதிடரைப் பார்த்து கேட்டதும் அவருக்கு கோபம் வந்து விட்டது. 

ஏம்மா! இரண்டு பேரோட ஜாதகமும் நல்லா இருக்கு! கல்யாணம் செய்யலாம். வாழ்க்கை பூரா மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இருக்கும்னுதானே சொன்னேன்.நீங்க தோஷம் ஏதும் இருக்கான்னு, ‌இல்லாத ஒன்னை எதுக்கும்மா இப்படி கேட்கறீங்க! 

இப்படித்தான் சில பேர் ராகு தோஷம் இருக்கு! கேது தோஷம் இருக்கு! சர்ப்பத் தோஷம் இருக்குன்னு சொல்லி அதை நிவர்த்தி செய்ய பரிகாரம் பண்ணுங்கன்னு சொல்லி அலைய விட்டு கிட்டு இருக்கிறாங்க! 

தோஷத்தை யெல்லாம் பார்க்காம, கல்யாணம் பண்ணிக்கிட்ட ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்களா! என்பதை மட்டும் பாருங்க! அதுதான் அவங்களுக்கு நல்லது என்று ஜோதிடர் சொன்னதும், ‌அதுதாங்க உண்மை

என்று பரமசிவம் ஆமோதித்தார். 

-------------------------------------


ஆக்கம்:

தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News