வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !

கவிஞர் இரா .இரவி !


தடை செய்ப்பட்ட போதும் சிலர் 

கடைகளில் மறைத்து வைத்து விற்கின்றனர் !


மாணவர்கள் பலர் வாங்கி மென்று 

மனநோயாளிகள் ஆகித் தவிக்கின்றனர் !


முகேஷ் இறந்த சோகமான உண்மைக் கதை 

முக்கியமான திரையரங்குகளில் காண்கிறோம் !


வாய் புற்றுநோயை பலர் வலிய

விலை கொடுத்து வாங்குகின்றனர் !


என்றாவது என்று தொடங்கி

என்றும் வேண்டும் என்றான்றனர் !


நன்றாக இருக்கும் பற்களை 

நாசம் செய்து கொள்கின்றனர் !


அருகில் இருக்கும் துணையும் 

அறவே வாசத்தை வெறுக்கின்றனர் !


காலையில் தொடங்கி தொடர்ந்து 

கண் மூடித் தூங்கும் வரை மெல்லுகின்றனர் !  


சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று 

சிதைக்கும் பாக்கு உனக்கு எதற்கு ?


பான்பார்க் குட்கா மெல்லும் மனிதர்களை 

பார்ப்பவர்கள் மதிப்பதில்லை உணருங்கள் !


மதிக்கும் மனிதராக இன்றே மாறுங்கள் !

மதி மயக்கும் பாக்கை விட்டொழியுங்கள் !


முடியாதது எதுவுமில்லை உலகில் 

முயன்றுடுங்கள்கெட்ட பழக்கத்தை ஒழியுங்கள்!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%