news Breaking News
clock

சித்த மருத்துவப் பல்கலை. மசோதாவை ஆளுநர் வெறுப்பது ஏன்?

சித்த மருத்துவப் பல்கலை. மசோதாவை ஆளுநர் வெறுப்பது ஏன்?



சென்னை: தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை ஏன் ஆளுநர் வெறுக்கிறார் என்று தெரியவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த அக்.15 ஆம் தேதி இரண்டாவது முறையாக முதல மைச்சரால் அனுப்பப்பட்ட சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் இதுவரை தன் இருப்பில் வைத்திருந்து இப்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று அமைச்சர் தெரி வித்தார். சித்த மருத்துவம் சங்க காலத்திலிருந்து தமிழர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் மருத்துவ முறை என்பதை அமைச்சர் நினைவூட்டினார். முதலமைச்சர் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி அரும் பாக்கத்தில் அலுவலகம் அமைத்துள்ளதோடு, மாதவரம் பால் பண்ணை பகுதியில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News