சென்னை: மணல் கொள்ளை தொடர்பாக அம லாக்கத் துறை பதிவு செய்த புகாரின் அடிப்படையில், தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசிய மில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் 2023 ஏப்ரல் 25-ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட் டார். இது சம்பந்தமான வழக்குகளின் அடிப்படையில் அம லாக்கத் துறை விசாரணை நடத்தி, சேகரித்த ஆதாரங்க ளின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்யக் கோரி டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. நடவடிக்கை எடுக்காத தால், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறை தகவல் பகிர்ந்த தற்காக மாநில அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசிய மில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது சட்டவிரோதம் என்றும், இது கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிரானது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை டிச.16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?