சென்னையில் 16 உழவர் அங்காடிகள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் 16 உழவர் அங்காடிகள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்



சென்னை, பிப். 


வேளாண்மை–உழவர் நலத்துறை சார்பில் 16 உழவர் அங்காடிகளை தொடங்கி வைத்து, 23 வேளாண் – உழவர் நலத்துறை கட்டடங்களை திறந்து வைத்து, 54 தொழில்முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கி, இயந்திர வாடகை சேவையினை வலுப்படுத்த 672 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் சேவைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


உழவர்கள் வளம் பெறுவதுடன் நுகர்வோர்களின் நலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர் சிந்தனையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் 11 உழவர் அங்காடிகள் மற்றும் 5 நடமாடும் உழவர் அங்காடிகள் மூலம் விவசாயிகளின் காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், பால் பொருட்கள், பனைப் பொருட்கள், பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய ஏதுவாக மொத்தம் 16 உழவர் அங்காடிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


புதிய வேளாண் கட்டடங்கள்


ராணிப்பேட்டை மாவட்டம் – திமிரி, தென்காசி மாவட்டம் – வாசுதேவநல்லூர், நாமக்கல் மாவட்டம் – மோகனூர், புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் – கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களில் 17 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்;


தேனி மாவட்டம் – கோட்டூர் மற்றும் சங்கராபுரம், மயிலாடுதுறை மாவட்டம் – ஆக்கூர், நாகப்பட்டினம் மாவட்டம் – கணபதிபுரம், திருப்பூர் மாவட்டம் – குளத்துப்பாளையம் மற்றும் பள்ளப்பாளையம் ஆகிய இடங்களில் 3 கோடியே30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்;


மயிலாடுதுறை மாவட்டம் – வைத்தீஸ்வரன் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் – திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் தலா 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 விதை சேமிப்புக் கிடங்குகள்;


நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தலா ஒரு ஒருங்கிணைந்த விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு வளாகம்;


கடலூர் மாவட்டம் – வேப்பூரில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கூடுதல் கட்டமைப்பு, சேலம் மாவட்டம் –க ாடையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் – இராசிபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் 18 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்;


கோயம்புத்தூர் மாவட்டம் – தொண்டாமுத்தூரில் 92 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, திண்டுக்கல் மாவட்டம் – ரெட்டியார் சத்திரத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம், அரியலூரில் 1 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை விரிவாக்க மையம்;


என மொத்தம் 53 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 23 வேளாண் – உழவர் நலத்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


100 மதிப்புக்கூட்டும் மையங்கள்


‘100 மதிப்புக்கூட்டும் மையங்கள்’ அமைக்கும் திட்டம் 2025–26 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 25 முதல் 35 சதவீதம் வரை முதலீட்டு மானியமும், அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. இவை தவிர, 5 ஆண்டுகளுக்கு 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக வேளாண் கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியமும் பெறலாம்.


இத்திட்டத்தில் தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை, மஞ்சள், வாழை, மா, பலா, தென்னை, மல்லிகை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்குத் தகுந்த மதிப்புக்கூட்டுதல் மையங்கள் அமைக்க மானியமாக தமிழ்நாடு அரசால் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 54 தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைத்திட மானியமாக 30 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கான ஒப்புதல் ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.


வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இயந்திர வாடகை சேவையினை வலுப்படுத்த 13 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 10 டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள், சட்டிக்கலப்பைகள், 11 சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள் போன்ற இணைப்புக்கருவிகள் உட்பட 672 இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் த.ஆபிரகாம், வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் இரா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%