செய்யாறில் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாள் முன்னிட்டு அண்ணாவின் திருவுருவுப் படத்திற்கு மலர் தூவி மரியாதை:

செய்யாறில் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாள் முன்னிட்டு அண்ணாவின் திருவுருவுப் படத்திற்கு மலர் தூவி மரியாதை:



செய்யாறு பிப் .4,


செய்யாறு ஆரணி கூட்டு சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே 57 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை திருஉருவப்படத்திற்கு மலர்த்துவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அதிமுக சார்பில் ஆரணி கூட்ரோட்டில் எம் ஜி ஆர் சிலை அருகில் நகர செயலாளர் கே. வெங்கடேசன் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 


இந்த நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அருணகிரி, வரத்தக்க அணி மாவட்ட செயலாளர் பூக்கடை கோபால், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராஜ்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அருண், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இளையராஜா, மாவட்ட கழக நிர்வாகிகள் தசரதன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ், வழக்கறிஞர் புவனேந்திரன்,மாணவரணி மாவட்ட செயலாளர் அரவிந்த்,மற்றும் சுதாகர், மகாதேவன், கோபி,தணிகாசலம் , மனோகர், பொன் பழனி, அபிராமி சுரேஷ்,எழில், ரமண முருகன்,பாலாஜி, வெங்கடேஷ்,ராஜி உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பட விளக்கம்: செய்யாறு நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம் முன்னிட்டு ஆரணி கூட்டு சாலையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு நகர செயலாளர் கே. வெங்கடேசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%