பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் ஜோதி எம்.எல்.ஏ., தலைமையில் அமைதி பேரணி !
Feb 03 2026
17
செய்யாறு, ஜன. 4 -
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 57வது நினைவு தினத்தையொட்டி, செய்யாறில் ஜோதி எம்.எல்.ஏ., தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
பேரறிஞர் அண்ணா துரையின் 57வது நினைவு தினம், செய்யாறில் ஜோதி எம்.எல்.ஏ., தலைமையில் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக செய்யார் ஆற்றங் கரை பெரியார் சிலை அருகே தி.மு.க., பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்டத் துணைச் செயலாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர்களான
என்.சங்கர், சீனிவாசன் ஞானவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன், கலைஞர் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?