ஆஸ்பத்திரியில் lCU க்கு வெளியே உள்ள சேரில் அம்மா அழுதபடியே கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள். கடவுளே அவரோட உயிரை காப்பாத்திடு. உன் கோவிலுக்கு வந்து அங்க பிரதக்ஷணம் செய்கிறேன், என்று எதிரில் உள்ள பிள்ளையார் படத்தைப் பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தாள். அலமு... பயமா இருக்குடி அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது இல்ல, என்று மனைவியிடம் பதட்டத்துடன் கேட்டான் சேகர் .அப்பா நல்லா தானே இருந்தார். எப்படி? திடீர்னு இப்படி ஆயிடுச்சு .கவலைப் படாதீங்க டாக்டர் வந்து நல்ல செய்தி சொல்லுவார். கொஞ்சம் பொறுமையா இருங்க என்றாள் அலமு. ரூம் கதவை திறந்து கொண்டு டாக்டர் வந்தார். சேகர் உங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் ,உடனே ஆஞ்சியோ பண்ணியாகணும் முதலில் அஞ்சு லட்சம் கட்டுங்க. மீதி அப்புறமா பாத்துக்கலாம் என்றார். சேகர் , அலமு விடம் ஐந்து லட்சம் என்னிடம் இல்லையே! இப்ப என்ன பண்றது? சரி, அலமு நீ அம்மாவ பாத்துக்கோ. நான் பிரெண்ட்ஸ்களிடம் கடன் கேட்டு பாக்குறேன் பணத்துக்கு ஏதாவது ரெடி பண்ணி கொண்டு வரேன். என்று சொன்னான் சேகர். நண்பர்களுக்கு போன் செய்து உதவி கேட்டான் யாரும் தரவில்லை. அம்மா அடிக்கடி ஏதாவது சேர்த்து வைடா பின்னாடி பசங்க வாழ்க்கைக்கு உதவும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பா நான் தான் எல்லா படத்தையும் செலவு பண்ணி விடுறேன் இப்போ என்ன பண்றதுன்னு புரியல; சரி நானே இன்னொரு நண்பர் வீட்டுக்கு நேரில் சென்று கேட்டு பார்க்கிறேன் என்று கூறிவிட்டு சென்றான் சேகர் .அந்த நண்பரிடம் ஒரு லட்சம் கிடைத்தது. மீதி 4 லட்சத்திற்கு என்ன செய்வது? என்று புரியவில்லை .நேரம் ஆகிக்கொண்டே போகிறது .பயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வந்தான் சேகர். அம்மா, டாக்டர் ஏதாவது சொன்னாரா? பணம் ஒரு லட்சம் தான் மா கிடைச்சுது என்றான். அப்பாவுக்கு பணம் கட்ட முடியவில்லை என்று ஓவென அழுதான் .அதற்கு அம்மா சேகர் அழாதடா.. அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் நல்லபடியா போய்ட்டு இருக்கு. அப்பா பிழைச்சுட்டார். நீ கவலைப்படாத என்றாள் .எப்படி மா பணம் கட்டாமல் வைத்தியம் பார்த்தாங்க என்றான் சேகர். நம்ம வீட்டு மாடியில் செகண்ட் ஃப்ளோர் இல் இருக்காரே ஜெயராமன் மாமா அவர் இன்சூரன்ஸ் ஏஜென்ட் அவர்தான் ஒரு நாள் வந்து வயசானவங்க வீட்ல இருந்தா கண்டிப்பா மெடிக்கல் இன்சூரன்ஸ் இருக்கணும் அப்படின்னு சொன்னார் .அதற்கு நானும் அப்பாவும் சரி அப்படின்னு சொன்னோம் அவரே பணமும் கட்டி உதவியும் செஞ்சார். உன்கிட்ட கேட்டா நீ எங்களை திட்டுவியோ யோனு பயமா இருந்தது. அதனால நீ ஆபீஸ் போனதுக்கப்புறம் நானும் அலமுவும் சாம்பார் பொடி, ரசப்பொடி, ஊறுகாய், மிளகாய் பொடி என வீட்டிலேயே தயார் செஞ்சு வைத்து விடுவோம். அதை உன் அப்பா தெரிந்த கடையில் போய் விற்று விட்டு வருவார் அதில் வரும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஜெயராமன் மாமாவிடம் கொடுப்போம். அத்தோடு நீ எங்களுக்கு செலவுக்காக கொடுக்கும் பணத்திலேயேயும் கொஞ்சம் மிச்சம் படுத்தி சேர்த்து வைத்திருக்கிறேன். நான் போன் பண்ணதும் ஜெயராமன் மாமா வந்து ஆஸ்பத்திரில இந்த இன்சூரன்ஸ் பேப்பரை கொடுத்துட்டார் அதனால ஆஸ்பத்திரியில் உடனே அப்பாவுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நல்ல வேலை!! நான் உடனே ஜெயராமன் மாமாக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிறேன். இந்தாடா சேகர் சாவி என்னோட இரும்பு பெட்டியில் உள்ள பணத்தையும் எடுத்து செலவுக்கு வச்சுக்கோ என்றாள் அம்மா. இங்க பாருங்க வர்ற வருமானத்துல அப்படியே செலவு பண்ணாம கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சேர்த்து வச்சுக்கணும் எல்லாத்தையும் செலவு பண்ணிட்டா திடீர்னு வரும் செலவுகளை நம்மால் சமாளிக்க முடியாது என்றாள் அலமு. குருவி சேக்குற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்சிருக்கேன் பார்த்து செலவு பண்ணுடா சேகர். சரிமா இப்போதான் எனக்கே புரிஞ்சது இனிமேல் நானும் என்னோட செலவு எல்லாம் குறைச்சுக்கிட்டு மாச வருமானத்துல சேமிக்கிறதுக்கு பழகிக்கிறேன். சேமிப்பு எவ்வளவு முக்கியம்னு இப்பதாம்மா எனக்கும் புரிந்தது.

எம் .எல். பிரபா
ஆதம்பாக்கம்.
சென்னை 88