news Breaking News
clock

சோறு

சோறு


*********

சோறேதான் வாழ்க்கையடா!

பசித்தவர்க்கே இது..

புரியுமடா!

தேடித் தேடியே அலைந்தே.. குப்பைத் தொட்டிக்குள் குனிந்தே..

வாழும் மனிதரைப் பார்த்ததுண்டோ? அவர்

அருகினில் சென்றவர் யாருமுண்டோ?

  (சோறே தான்...)


அன்னையுமில்லை..

தந்தையுமில்லை.. வீதியில் சிறுவர்கள் திரிவாரே..

விழிகளில் வழியும்.. 

கண்ணீர் துடைக்க உறவுகள் இன்றி நடப்பாரே .!

விடுதியில் காசை வீசியே வாங்கிய உணவோ குப்பையில் குவியுதடா.. வீதிக்கு வீதி.. பசியுடன் சோறை தேடுவோர் வாழ்வும் தொடருதடா!

  (சோறே தான்..)


படைத்தவன் மறந்தான்!

அடுத்தவன் சிரித்தான்!

பசித்தவன் சோறுத் தேடுகிறான்.!

குவித்தவன் மறைப்பதும்.. பசித்தவன் துடிப்பதும்...

சோறினால் வந்த வினைதானே!

இருப்பவன் ஒருபிடி சோறு எடுத்து.. ஏழைக்குக் கொடுத்தால் தானமடா.. எச்சில் இலையில் தேடிட வைத்தால் அதுதான் மாபெரும் பாபமடா!

  (சோறே தான்..)


  *வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News