news Breaking News
clock

வள்ளலார்

வள்ளலார்



வள்ளலார் நமது

வள்ளலார்

மருதூரில் பிறந்த

வள்ளலார்

வெள்ளாடை அணிந்த

வள்ளலார்

வேறுபாடு இல்லா

வள்ளலார்!


வசிக்கின்ற உயிர்கள்

அனைத்துமே

வாடாமல் இருக்க

வேண்டுமே

பசித்தோரின் முகத்தைப்

பார்த்தவர்

பசிதன்னை உடனே

போக்கினார்!


சன்மார்க்க சங்கம்

நிறுவினார்

சத்தியநல் ஞான

சபையினர்

நன்மார்க்கம் தம்மையே

நாடுவோம்

நலங்களையே என்றும் 

பாடுவோம்!


கொல்லாமை தம்மை

வேண்டினார்

கொண்டஇறை ஒன்றே

பாடினார்

இல்லாமை போக்க

நாடினார்

இருந்தமிழில் அருட்பா

பாடினார்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News