news Breaking News
clock

ஜோதிடக்கிளியின் நக்கல்

ஜோதிடக்கிளியின் நக்கல்



மனிதா...

கூண்டுக்குள்ளே நான்...

வெளியிலே நீ

யோசிச்சுப் பார்த்தா..

சிக்கி இருக்குறவன் 

நீதான்!


கண்ணை மூடிச்

சீட்டெடுத்து

காரணமின்றிக்

“கீச்”சென்பேன்!

அதையும் மொழிபெயர்த்து

உன் வாழ்க்கையை 

எழுதுவான் ஜோதிடன்!


நாளை நல்ல நாளாம்,

அப்புறம் கெட்ட நாளாம்

நான் சொன்னது 

ஒண்ணும் இல்லை

அவன் கற்பனைதான் 

எல்லாமே!


ஆறறிவு மனிதன் நீ...

ஐந்தறிவுப் பட்சி நான்...

உன் முடிவெடுக்க

என்னை நம்புற பாரு..

உன் மூளைக்கு 

இன்னும் முகவுரையே

எழுதப்படலையோ?


நான் பசியில கத்துறேன்

நீ பயத்துல நம்புறே

இரண்டுக்கும் நடுவில

அவன் காசு எண்ணுறான்!


ஆறறிவு மனிதா,

உன் எதிர்காலத்துக்கு

கிளி தேவையில்லை.

ஒளிதான் தேவை...

அதை ஏற்று

அதுவே தரும் ஏற்றம்!


----

முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News