news Breaking News
clock

தங்கமே தங்கம்

தங்கமே தங்கம்


(தங்கவயல் தங்கச் சுரங்கத்தில் வேலைப்பார்த்த ஒரு ஏழைத் தொழிலாளி தன் பெண் குழந்தையைப் பார்த்துப் பாடியப் பாட்டு!)


இங்குவந்து பிறந்தாயே தங்கமே தங்கம்.!

தங்கம் மட்டும் இல்லையடி

தங்கமே தங்கம்!


தங்கமில்லை என்றுசொல்லி

தங்கமே தங்கம்!

 சுரங்கத்தை மூடிவிட்டார்..

தங்கமே தங்கம்!


 தங்கராசு பெத்தமகளே

 தங்கமே தங்கம்! உனக்கு

தங்கநகை போடலையே

தங்கமே தங்கம்!


தாலிவாங்க துட்டுயில்லே தங்கமே தங்கம்! உனக்கு தங்கம் என்று பெயரிட்டேன்.. தங்கமே தங்கம்!


ஏழைவீட்டு பொன்மகளே தங்கமே தங்கம்! தங்கம் பவுன் ஒரு இலட்சம்.!

தங்கமே தங்கம்!


தங்கவயல் கருகியதேன் தங்கமே தங்கம்! தங்கம் மட்டும் பெயரில் உண்டு! தங்கமே தங்கம்!


வே.கல்யாண்குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News