தமிழ்த்தாத்தா

தமிழ்த்தாத்தா


*************

பதிப்பெனும் துறைக்கு வன்மை

     பாய்ச்சிய தமிழின் தாத்தா

மதித்திடும் புகழால் தொன்மை

     மாண்பினைப் பதித்த தாத்தா

துதித்திடும் வகையில் தமிழைத்

     துலங்கவே வைத்த தாத்தா

உதித்திடும் கதிர்போல் எங்கும்

     உயர்வினை யளித்த தாத்தா! 


சுவடிகள் தேடித் தேடிச்

     சுற்றிய அருமைத் தாத்தா

உவப்புடன் தமிழை அச்சில் 

     ஊற்றிய பெருமைத் தாத்தா

கவர்கிற வகையில் ஆய்ந்து

      கனித்தமிழ் காத்த தாத்தா

துவண்டிடா வண்ணம் நாளும்

      தொண்டினைப் புரிந்த தாத்தா! 


தொன்மைகள் மீண்டும் ஓங்கத்

     தொடர்பணி செய்த தாத்தா

நன்மைகள் நல்கி வாழ்ந்த

     நற்றமிழ் அறிஞர் தாத்தா

பன்னருங் கலைகள் சொல்லும்

     பனுவலை மீட்ட தாத்தா

என்னரும் நாட்டில் என்றும் 

     எழுச்சிஉ. வே.சா தாத்தா! 

 

   

*கவிஞர் மு.வா.பாலாஜி,

ஓசூர்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%