நீதி

நீதி


நீதி என்பது மனித நேயத்தின் நிழல். மனிதனின் ஒழுக்கம், 

நியாயம், உண்மை இவற்றை உள்ளடக்கியது.

ஆனால், தற்போது 

நேர்மையின் பாதையில் நீதி நடக்காமல் இருப்பதும் உண்டு.

சாட்சியின் அடிப்படையில் தான் தீர்ப்பு.

பலமுள்ளவர்களுக்கு காவலாய் நின்று நிரபராதிக்குத் தண்டனையை பெற்றுத்தரும் பொய் சாட்சி.

சில சமயம் 

பொய்மை வீழ

உண்மை எழுந்து நிற்கும்.

கண்ணீர் துடைக்கும் கருணையின் கை நீதி.

பாகுபாடு இல்லாத பார்வை நீதிக்கு உண்டு.

பாவம், புண்ணியம் அளக்கும் தராசு நீதி.

உலகம் நிலைக்க காரணம் நீதியே.

இதயங்களின் 

துடிப்பு நீதி.

இறுதியில் நீதியே வெல்லும்.


அன்புடன்

உ.மு.ந.ராசன் கலாமணி

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%