news Breaking News
clock

திசையன்விளை மனோ கல்லூரியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சேர்ப்பு முகாம்

திசையன்விளை மனோ கல்லூரியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சேர்ப்பு முகாம்



திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் “சிறப்பு வாக்காளர் பட்டியல் சேர்ப்பு முகாம்” இன்று சிறப்பாக நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் முனைவர் லில்லி அவர்களின் ஆலோசனையின் பேரில், திசையன்விளை தாலுகா வருவாய் ஆய்வாளர் கோமதிநாயகம் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் (தேர்தல்) ஐயப்பன் ஆகியோர் தலைமையில் இந்த முகாம் நடத்தப்பட்டது. 18 வயது நிறைவடைந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய வாக்காளர்களாக பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது.


இந்த முகாமில் மொத்தம் 23 மாணவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் வணிகவியல் துறைத் தலைவர் ஒயிட்டன் சகாயராஜ், தமிழ் துறைத் தலைவி தணிகை செல்வி, கணிதவியல் துறைத் தலைவர் மகேந்திரன், பேராசிரியர்கள் முருகன், ராமபாண்டி ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர். 


முகாம் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் பலவேச கிருஷ்ணன் மேற்கொண்டிருந்தார்.


இம்முகாம் மூலம் இளம் தலைமுறையினருக்கு வாக்குரிமையின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டதுடன், ஜனநாயகப் பொறுப்புணர்வை வளர்க்கும் ஒரு பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News